கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு பகுதியில் அமைந்திருக்கும் பண்ணைகளில் தொடர்ச்சியாக வாத்துகள் உயிரிழந்து உள்ளது. இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அங்கு உள்ள பறவைகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து பறவை காய்ச்சல் பரவலை தடுக்கு பொருட்டு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதியில் இருந்து ஒரு கி.மீ. சுற்றளவில் வளர்க்கப்படும் கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளை அழிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், அங்கு இறைச்சி மற்றும் முட்டைகளை உண்ணவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.