காங்கிரஸ் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யப் போகிறது: ராகுல் காந்தி!

காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யப் போகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிஹாரின் பாகல்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பாஜகவினர் அதிகப்படியான இடங்களைப் பெறுவோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால், நான் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்தி கொள்கிறேன். பாஜகவினர் 150 இடங்களுக்கு மேல் பெற மாட்டார்கள்.

இண்டியா கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிவீரர் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம். இந்தியாவுக்கு இரண்டு வகையான தியாகிகள் தேவையில்லை, அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்வோம். ஜிஎஸ்டி முறையை மாற்றுவோம். ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் சம்பளத்தை இரட்டிப்பாக்குவோம்.

விவசாயிகளுக்கு இரண்டு உத்தரவாதங்களை அளிக்கிறோம். காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யப் போகிறது. இரண்டாவதாக, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நாங்கள் வழங்கப் போகிறோம்” என்றார்.

RELATED ARTICLES

Recent News