கோடிக்கணக்கில் வசூலை அள்ளிய கில்லி…ரீ-ரிலீஸிலும் சாதனை

இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கில்லி. இப்படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. வித்யாசாகர் இசையில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

கில்லி திரைப்படம் நேற்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் டிக்கெட் முன்பதிவில் மட்டுமே இதுவரை ரூ. 65 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்தது. படம் வெளியான நேற்று முதல் நாளில் உலகளவில் ரூ.10 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கில்லி படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் இனி வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News