இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனிநபர் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 1, 2024 முதல் மருத்துவ காப்பீட்டுக் கொள்கைகளை வாங்குவதற்கான வயது வரம்பை இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நீக்கியுள்ளதால், இப்போது 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் புதிய மருத்துவ காப்பீட்டுக் கொள்கைகளை வாங்க முடியும் என்று தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவக் காப்பீடு எடுப்பவர்கள் சலுகைகளை பெறுவதற்கான காத்திருப்பு காலமும் குறைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய மாற்றங்களை இந்த ஏப்ரல் முதல் செயல்படுத்த இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.