ஓசூர் அருகே வீட்டில் 30 கிலோ கஞ்சா பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கெலமங்கலம் அடுத்துள்ள குடியூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில், கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போது, முருகேசன்(37) என்பவர் வீட்டில் 30 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து முருகேசனை கைது செய்தனர்.
இது தொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.