98.5 % மதிப்பெண்.. இருப்பினும் இளம்பெண்ணை கலாய்க்கும் நெட்டிசன்கள்.. காரணம் என்ன? : குரூரத்தின் உச்சம்!

உத்தரபிரதேச மாநிலம் சித்தாப்பூர் பகுதியில் உள்ள சீதா பால் வித்யா மந்தீர் பள்ளியில் படித்து வந்தவர் பிரச்சி நிகம். சமீபத்தில் 10-ஆம் வகுப்பு மாநில தேர்வை எழுதிய இவர், 600-க்கு 591 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

அதாவது, 98.5 சதவீத மதிப்பெண்களை பெற்றிருந்த இவர், தன்னுடைய சந்தோஷத்தையும், இன்ப அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதாவது, “நான் தான் முதல் மாணவியாக வருவேன் என்று நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. படிப்பதில் மட்டும் தான் கவனம் செலுத்தினேன். ஆனால், முதல் மாணவியாக வருவேன் என்று நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய கடின உழைப்பை கண்டு நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறியிருந்தார்.

மேலும், பொறியாளராக வேண்டும் என்று ஆசைப்படும் இவர், IIT – JEE தேர்வு எழுதுவதற்கு முடிவு செய்துள்ளார். இவ்வாறு பல்வேறு கனவுகளோடு உள்ள இந்த பெண்ணை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆனால், இணையத்தில் உள்ள ஒருசில விஷக்கிருமிகள், அந்த பெண்ணின் உருவத்தை வைத்து கிண்டலடித்து வருகின்றனர். அதாவது, அந்த பெண்ணின் முகத்தில், ஹார்மோன் பிரச்சனைகளின் காரணமாக, அதிகப்படியான ரோமங்கள் வளர்ந்துள்ளன.

இதனை பார்த்த ஒருசில நெட்டிசன்கள், வழக்கத்தில் உள்ள அழகு படிநிலைகளை வைத்து, அந்தப் பெண்ணை விமர்சித்து வருகின்றனர். இவ்வாறு, பிரச்சி நிகமை ஒருசிலர் விமர்சித்து வந்தாலும், அவருக்கு ஆதரவாகவும் பலர் ஒன்று திரண்டுள்ளனர். விமர்சனம் செய்பவர்களுக்கு, அவர்கள் தங்களது பதிலடிகளை கொடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News