ஏப்ரல் 24 மறு தேர்தல்.. 8 இடங்களில் மட்டும்.. எங்கெங்கு தெரியுமா? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய 50 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில், ஒருசில பூத்களில், கலவரம் வெடித்தது. மேலும், பூத்களில் இருந்த EVM மெஷின்களும், சேதப்படுத்தப்பட்டது. இதன்காரணமாக, அருணாச்சல பிரதேசத்தின் 8 பூத்களில் மறு தேர்தல் நடத்தப்பட இருப்பதாக, அம்மாநில தலைமை துணை தேர்தல் அதிகாரி, லிகென் கோயு அறிவித்துள்ளார்.

கிழக்கு காமெங் மாவட்டத்தில் உள்ள பாமெங் சட்டமன்ற தொகுதியின் சரியோ பூத்திலும், குருங் கூமே மாவட்டத்தில் உள்ள நியாபின் சட்டமன்ற தொகுதியின் லாங்டே லூத் பூத்திலும், சட்டமன்ற மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும், சியாங் மாவட்டத்தின் ரம்கோங் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள போக்னே மற்றும் மோலம் ஆகிய இரண்டு பூத்களில் நாடாளுமன்ற மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

மேலும், அப்பர் சுபன்சிரி மாவட்டத்தின் நாசோ நாடாளுமன்ற தொகுதியில், டிங்சர், போகியா சியாம், ஜிம்பாரி மற்றும் லெங்கி ஆகிய பூத்களில், நாடாளுமன்ற மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

RELATED ARTICLES

Recent News