உருகும் பனிப்பாறைகள்.. இமயமலையில் காத்திருக்கும் அதிர்ச்சி.. இஸ்ரோ சொன்னது என்ன?

காலநிலை மாற்றம் காரணமாக, உலகத்தில் உள்ள பல்வேறு இடங்களில், மிகவும் மோசமான வகையில் வானிலை மாறி வருகிறது.

இந்த காலநிலை மாற்றத்தின் காரணமாக, துபாய், சீனா, அமெரிக்கா, இந்தியா என்று பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 1984-ஆம் ஆண்டில் இருந்து 2023-ஆம் ஆண்டுகள் வரை, செயற்கைகோளின் தரவுகளை வைத்து, இஸ்ரோ ஆராய்ச்சி ஒன்றை செய்துள்ளது.

அந்த ஆராய்ச்சியில், “இமயமலையில் உள்ள பனிப்பாறைகள், காலநிலை மாற்றத்தின் காரணமாக மிகவும் வேகமாக உருகி வருகிறது. இதன்காரணமாக, அங்குள்ள பனி ஏரிகளின் பரப்பளவு அதிகரித்துள்ளது.

இவ்வாறு தொடர்ச்சியாக பனிப்பாறைகள் உருகி வந்தால், புதிய பனி ஏரிகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. இந்த பனிப்பாறைகள் உருகி நீராக மாறுவது தான், அங்குள்ள மக்களின் நீர் ஆதாரமாக உள்ளது.

இருப்பினும், இந்த பனிப்பாறைகள் உருகுவது அதிகமானால், வெள்ளம் ஏற்படுவது போன்ற சில ஆபத்துகள் உள்ளது. இது, அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பேராழிவை ஏற்படுத்தும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News