புதிய புதீன் இந்தியாவில் உருவாகி வருகிறார் என்று பிரதமர் நரேந்திர மோடியை, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் விமர்சித்திருந்தார்.
மேலும், தங்களது 10 ஆண்டுகால ஆட்சியில் செய்து முடித்த சாதனைகள் குறித்து பேசாமல், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை விமர்சித்து வருகிறார் என்றும் கூறியிருந்தார்.
இவரது இந்த விமர்சனங்களுக்கு, மகாராஷ்டிரா மாநிலத்தின் பாஜக தலைவரும், அம்மாநில துணை முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ், பதிலடி கொடுத்துள்ளார்.
“தேர்தல் தோல்வியால் ஏற்பட்டுள்ள கவலையின் காரணமாக, அவர்கள் மோடியை அசிங்கப்படுத்துகின்றனர். எப்போதெல்லாம் மோடி அசிங்கப்படுத்தப்படுகிறாரோ, அப்போதெல்லாம் அவர் பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறார்” என்று தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.