டெல்லியில் ஜகாங்கிர்புரி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று ராமர் புகைப்படம் பொறிக்கப்பட்ட பேப்பர் பிளேட்டுகளில் சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்பட்டது. சாப்பிட்ட பிறகு அந்த பேப்பர் பிளேட்டுகளை குப்பை தொட்டியில் போட்டுள்ளனர்.
ராமர் புகைப்படம் உள்ள பிளேட்டுகளை குப்பை தொட்டியில் வீசியதால் அதனை பார்த்த சிலர் கோபம் அடைந்தனர். இது பற்றி இந்து அமைப்புகள் சிலருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில், அங்கு வந்த இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அந்த ஓட்டலை அடித்து நொறுக்கினர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் நடத்திய விசாரணையில், ஓட்டல் உரிமையாளர் மீது தான் தவறு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.