திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்தவர் ஷேக் ஷாஜகான். இவர், பல்வேறு பெண்களை பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்தது, அவர்களிடம் இருந்த நிலங்களை பறித்துக் கொண்டது, அமலாக்கத்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்தியது என்று பல்வேறு வழக்குகளில் சிக்கியிருந்தார்.
ஷேக் ஷாஜகானை பிடிப்பதற்கு அம்மாநில காவல்துறையினர் 55 நாட்கள் போராடி வந்த நிலையில், கடைசியாக, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் கடுமையான கண்டனங்களுக்கு பிறகு, கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி அன்று, கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், நீதிமன்றத்தின் விசாரணைக்கு பிறகு, குற்றவாளிகள் ஏற்றப்படும் வேனில் அவர் ஏற்றப்பட்டார். அப்போது அங்கு வந்த தனது மகளை பார்த்த ஷேக் ஷாஜகான், கண்ணீர்விட்டு கதறி அழுதிருந்தார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வந்த நிலையில், பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மல்வியா, தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அவரை கண்டமேனிக்கு விமர்சித்துள்ளார். அதாவது, “மம்தா பானர்ஜியின் ‘Poster Boy’-யும், பெண்களை வன்கொடுமை செய்தவருமான ஷேக் ஷாஜகான், தேற்றவே முடியாத குழந்தை போல் அழுதுக் கொண்டிருக்கிறார்.” என்று விமர்சித்துள்ளார்.
மேலும், “சட்டம் ஒருவரை பிடித்த பிறகு, அவர்களை காப்பாற்ற யாருமே வரமாட்டார்கள். கண்டிப்பாக மம்தா பானர்ஜி வரமாட்டார். மம்தா பானர்ஜியால், தன்னுடைய அமைச்சர்களை கூட, காப்பாற்ற முடியவில்லை” என்றும் தனது பதிவில் குறிப்பட்டிருந்தார்.