உலகிலேயே வலிமையான ராணுவப் படையை வைத்து முதல் 5 நாடுகளில், இந்தியாவும் ஒன்று. மற்ற துறைகளை காட்டிலும், இந்தியாவின் ராணுவப் படை என்பது, எப்போதும் வலிமை மிகுந்ததாகவே இருந்துள்ளது.
இவ்வாறு இருக்க, பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆணையம், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “DMSRDE-யின் கான்பூர் பிரிவு, பி.ஐ.எஸ் 6 அளவிலான உச்சகட்ட அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்புப் படை வீரர்களை பாதுகாப்பதற்கு, மிகக் குறைவான எடை உள்ள புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் , இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக, மோனோலித்திக் செராமிக் மூலமாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட், 6 7.62*54 API தோட்டாக்களையும் தடுத்து நிறுத்தும்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட், சண்டிகரில் உள்ள TBRL என்ற ஆய்வகத்தில், வெற்றிகரகமாக பரிசோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.