Connect with us

Raj News Tamil

ஐபிஎல்: போராடி தோற்ற குஜராத் அணி!

விளையாட்டு

ஐபிஎல்: போராடி தோற்ற குஜராத் அணி!

இந்தாண்டு ஐபிஎல் தொடரின் 40-வது போட்டி புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் நேற்று மோதின.

இதில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசு தேர்வு செய்த நிலையில், டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது.

அக்சர் படேல் 43 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதிரடியாக விளையாடி கேப்டன் ரிஷப் பண்ட் 43 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் எடுத்தார்.

இதனைத்தொடர்ந்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி, தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், பின்னர் அதிரடியாக விளையாடி வெற்றிக்காக போராடியது.

கேப்டன் சுப்மன் கில் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும், சாய் சுதர்சன் 65 ரன்களும் சாஹா 39 ரன்களும் குவித்தனர்.

அதிரடியாக விளையாடி டேவிட் மில்லர் 23 பந்துகளில் 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் குஜராத் அணிக்கு 19 ரன் தேவைப்பட்ட நிலையில் ரஷித் கான் முகேஷ் குமார் வீசிய ஓவரில், முதல் இரண்டு பந்துகளில் பவுண்டரி விளாசினார். அடுத்த இரண்டு பந்துகளில் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. ஐந்தாவது பந்தில் சிக்ஸர் விளாசிய ரஷித் கான், கடைசி பந்தில் ரன் எடுக்காமல் போக குஜராத் அணி தேல்வியை தழுவியது.

குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக டார் சலாம் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன்மூலம் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி திரில் வெற்றிபெற்றது.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top