நடிகரும், சமந்தாவின் முன்னாள் கணவருமானவர் நாக சைத்தன்யா. இவர், பிரபல நடிகை சோபிதா துலிபாலாவுடன், ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக, சமீபத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால், அதற்கு இருவரும் எந்தவொரு மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நாக சைத்தன்யா காட்டிற்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதே போல், காட்டிற்கு சென்ற புகைப்படங்களை, நடிகை சோபிதாவும் வெளியிட்டுள்ளார்.
இந்த இரண்டு புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வருவதாக, கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர். இதன்காரணமாக, இவர்களது காதல் கிசுகிசு, மீண்டும் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.