பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் குஜராத். இங்கு கடந்த 1 மற்றும் 5 ஆம் தேதி இருபிரிவுகாளாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று 8-ஆம் தேதி முடிவுகள் வெளியாகின.
குஜராத்தின் 182 தொகுதிகளில் 156 இடங்களை கைப்பற்றி 7-வது முறையாக ஆட்சிப்பொறுப்பேற்றுள்ளது. இதைத்தொடர்ந்து 2-வது முறையாக பூபேந்திர படேல் புதிய முதல்வராக பதவியேற்றார்.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி முதல்வராக பதவியேற்ற முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். ஆற்றல் மிகுந்த இந்த அணி குஜராத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று கூறியுள்ளார்.