ஐபிஎல் தொடரின் 41-வது போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது.
விராட் கோலி (51), ரஜத் பட்டிதார்(50), கேமரூன் கிரீன் (37) மற்றும் ஃபாப் டூப்ளெசி (25) ஆகியோர் அணிக்கு அதிகபட்ச ரன்கள் எடுத்தனர்.
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்கத்திலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஹெட் (1), அபிஷேக் சர்மா (31), மார்க்ரம் (7), கிளாசன் (4), நிதிஷ் ரெட்டி (14), மற்றும், கேட்பன் கம்மின்ஸ் (31) மற்றும் புவனேஷ்வர் குமார் (13), ஆகிய ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதிவரை போராடிய ஷாபாஷ் அகமது (40) ரன்களும், உனத் கட் (8) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சிறப்பாக பந்து வீசிய கேமரூன் கிரின், சுவப்நில் சிங் மற்றும் கரண் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், வில் ஜாக்ஸ், யாஸ் தயாள் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன் மூலம் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.