விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு!

மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மக்களவை 2 ஆம் கட்ட தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று (ஏப்.26) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 14 தொகுகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ராஜஸ்தானில் 13, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசத்தில் தலா 8, மத்திய பிரதேசத்தில் 6, அஸ்ஸாம், பிகாரில் தலா 5, சத்தீஸ்கர், மேற்கு வங்கத்தில் தலா 3, மணிப்பூர், திரிபுரா, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதற்கு முன்னதாக முதல் கட்டமாக தமிழகம் (39), புதுச்சேரி (1), உள்பட 21 மாநிலங்கள் -யூனியன் பிரதேசங்களில் அடங்கிய 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது.

RELATED ARTICLES

Recent News