ரூ.4.8 கோடி பறிமுதல் : பாஜக வேட்பாளர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கர்நாடகாவில் 14 தொகுதிகளில் இன்று (ஏப்.,26) லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிக்கபள்ளாபுரா தொகுதி பா.ஜ., வேட்பாளரான கே.சுதாகருக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில், பதுக்கி வைத்திருந்த ரூ.4.8 கோடி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக மதநாயக்கனஹள்ளி காவல் நிலையத்தில் கே.சுதாகருக்கு எதிராக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

RELATED ARTICLES

Recent News