சளி, காய்ச்சலுக்கான 67 மாத்திரைகள் தரமற்றவை!

சளி, காய்ச்சலுக்கான 67 மாத்திரைகள் தரமற்றவை என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளுக்கான 67 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளை மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்தன.

அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் சளி, காய்ச்சல், வலி, செரிமான பாதிப்பு, கிருமி தொற்று, வைட்டமின் பாதிப்பு உள்ளிட்ட குறைபாடுகளுக்கு பயன்படுத்தப்படும் 67 மாத்திரைகள் தரமற்றவை என்பது தெரிய வந்துள்ளது.

அதில் பெரும்பாலானவை மேற்குவங்கம், இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் தயாரிக்கப்படும் மாத்திரைகள் ஆகும். தரமற்றவை என தெரிவிக்கப்பட்டுள்ள மருந்துகளை மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தனது இணையதளத்தில் (https://cdsco gov.in) வெளியிட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News