உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், “இரண்டு வருடங்களுக்கு முன்பு, என்னுடைய ஒரே மகனுக்கு திருமணம் செய்து வைத்தோம். மருமகள் எங்கள் வீட்டிற்கு வந்த பிறகு, தன்னுடைய காதலை என்மீது வெளிப்படுத்த ஆரம்பித்தாள்.
மேலும், தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும் என்னை நிர்பந்தித்தாள். இதுமட்டுமின்றி, என்னுடைய மகனை வெறுமனே தான் திருமணம் செய்துக் கொண்டதாகவும், என்னுடன் வாழ்வது தான் அவளுடைய ஆசை என்றும் கூறினாள்.
இவை அனைத்தையும் தாண்டி, எனது கணவருடன் வாழ்வதற்கு என்னை அனுமதிக்க மறுக்கும் அவள், நான் அவளுக்கு சொந்தமானவள் என்று கூறுகிறாள். மாமியார் மருமகளாக நாம் நம்முடைய வாழ்க்கையை வாழலாம்.
நான் ஒரு மாமியாராக உன் மீது அன்பு வைத்துள்ளேன் என்று அந்த பெண்ணிடம் கூறிவிட்டேன்” என்று அந்த புகாரில் அவர் கூறியுள்ளார்.
இந்த பெண்ணின் செயல்பாடுகள் குறித்து பேசிய கணவன், “இவளது செயல்பாடுகளை நாங்கள் எதிர்த்தாலும், அவள் என் தாயிடம் வாழவே விரும்புகிறாள்.
மேலும், என் தாயை, அவளிடம் இருந்து பிரித்தால், உயிரை விடவும் முடிவு எடுத்துள்ளாள்” என்று அவர் கூறியிருக்கிறார். இவ்வாறு வித்தியாசமான புகாரை பார்த்த காவல்துறையினர், கடும் அதிர்ச்சி அடைந்து, என்ன செய்தென புரியாமல் திகைத்துள்ளனர்.