ஓவர் நைட்டில் ஒபாமா.. ரூ.60 லட்சம் சொத்து.. புதைந்து கிடந்த புதையலை தேடி எடுத்த நபர்..

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியை சேர்ந்தவர் ராம் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ). இவர், தனக்கு குழந்தைகள் எதுவும் இல்லாததால், மரணத்திற்கு பிறகு தனது சொத்துக்கள், ரிலையன்ஸ் பங்குகள் உட்பட அனைத்தையும், நெருங்கிய உறவினரின் மகன் ரகுவுக்கு ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) வழங்கியுள்ளார்.

ஆனால், தனது ரிலையன்ஸ் பங்குகள் தொடர்பான எந்தவொரு உண்மையான சான்றிதழ்களும், ராமிடம் இல்லை. ரகு, டெல்லியில் வசித்து வருவதால், தனது மாமாவின் ஆவணங்கள் குறித்து, அவருக்கும் சரியாக தெரியவில்லை.

இவ்வாறு இருக்க, ஷேர் சமதான் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனரும், அந்நிறுவனத்தின் இயக்குநருமான விகாஷ் ஜெயின், ரகுவுக்கு உதவி செய்துள்ளார். இதுகுறித்து டைம்ஸ் நவ் இணையதளத்திற்கு, விகாஷ் ஜெயின் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “ரகுவின் மாமா தொடர்பான பல்வேறு தகவல்கள் குறித்து நாங்கள் கடுமையான ஆராய்ச்சி செய்தோம். அதிர்ஷ்டவசமாக, ரகு மாமாவின் பெயரில் உள்ள இன்னும் சில பங்குகளின் தகவல்கள் சிலவற்றை நாங்கள் கண்டறிந்தோம்.

ஆனால், ரகுவிற்கு ஆதரவாக Probate of Will என்ற ஆவணத்தை பெறுவது தான், எங்களுக்கு அடுத்த கட்ட சவாலாக இருந்தது. நாங்கள் முதலில் அனைத்து நிறுவனங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அதன்பிறகு, பங்கு வைத்திருப்பு குறித்து தகவல்களை திரட்டினோம். நாங்கள் அந்த தகவல்களை பெற்றபிறகு, Probate of Will ஆவணத்தை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டோம்.

ரகு தன்னுடைய குடும்ப வழக்கறிஞரை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். நாங்கள் அவருடன் இணைந்து, பெரிய சட்டப் போராட்டம் நடத்தி, கடைசியாக Probate of Will ஆவணத்தை பெற்றோம்” என்று கூறினார்.

ஆனால், இப்போதும் நாங்கள் பாதி வெற்றியை மட்டும் தான் பெற்றுள்ளோம் என்று கூறிய அவர், “நாங்கள் மீண்டும் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் பேசினோம். அசல் சான்றிதழ்கள் இல்லாமல் இருப்பதால், சில தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய சூழலும் இருந்தது” என்று கூறினார்.

தற்போது 60 லட்சம் ரூபாய் மதிப்புக் கொண்ட அந்த பங்குகள் தொடர்பான ஆவணங்களை, மிகவும் நுனுக்கமான முறையில், அந்நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. இவ்வாறு ஆய்வு செய்தபோது, ஒரு சிறிய பிழை இருப்பது கண்டறியப்பட்டது.

அது என்னவென்றால், ரகு மாமாவின் பங்குகளின் சான்றிதழிலும், இறப்பு சான்றிதழிலும், அவரது பெயரில் சில மாற்றங்கள் இருந்துள்ளது. இதனைக் கண்டுபிடித்த அந்த நிறுவன அதிகாரிகள், மாற்றத்திற்கான காரணம் குறித்து கேட்டுள்ளனர்.

ஆனால், அதுவொரு எழுத்துப் பிழை என்பதால், அந்த பெயர் மாற்றத்திற்கான காரணம் குறித்து, எந்த ஆதாரத்தையும், ரகுவால் சமர்ப்பிக்க முடியவில்லை. இறுதியில் நிறுவன அதிகாரிகள், அந்த பிழையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், ரகுவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர்.

ஒருவழியாக பெரும் போராட்டத்திற்கு பிறகு, தனது மாமாவின் சொத்துக்களும், அவர் உழைத்து சம்பாரித்து சேர்த்து வைத்த பங்குகளும், அவரது விருப்பப்படி ரகுவிற்கு இறுதியில் கிடைத்துவிட்டது.

RELATED ARTICLES

Recent News