உத்தரபிரதேச மாநிலம் பில்லிபிட் பகுதியில் பாஜக சார்பில், கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி அன்று, பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி, கடவுள் மற்றும் மதம் தொடர்பாக பேசியிருந்தார்.
மோடியின் இந்த பேச்சை சுட்டிக் காட்டி, அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி, 6 வருடங்களுக்கு எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடக் கூடாது என்று வழக்கு தொரடப்பட்டது.
அதாவது, ஆனந்த் எஸ்.ஜோன்டலே என்ற வழக்கறிஞர், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், மோடியின் பேச்சு, வாக்காளர்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி சச்சின் தத்தா, அந்த மனுவை தள்ளுபடி செய்து, உத்தரவிட்டார்.
இதுமட்டுமின்றி, மோடியை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்த முடியாது என்றும் நீதிபதி கூறியிருந்தார்.