சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், நேற்று சென்னை சிதம்பரம் மைதானத்தில், ஐ.பி.எல் லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சென்னை அணி, அபார வெற்றி பெற்றது.
இவ்வாறு இருக்க, தோனியின் ரசிகர் செய்த ஒரு செயல், சென்னை அணியின் வெற்றியை காட்டிலும், அதிக அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
அதாவது, பொதுவாக கிரிக்கெட் போட்டி நடக்கும்போது, மைதானத்திற்கு வித்தியாசமான முறையில் வந்தவர்கள், கேமராமேன்களால் படம்பிடிக்கப்படுவது வழக்கம். அவ்வாறு படம் பிடிக்கப்பட்ட சிலர், வைரலாகிய பல சம்பவங்கள் நடந்துள்ளது.
அந்த வகையில், நேற்று நடைபெற்ற போட்டியில், இளைஞர் ஒருவர் ஒரு Chart-ஐ தனது கையில் உயர்த்திப் பிடித்தவாறு நின்றுக் கொண்டிருந்தார். அந்த Chart-ல், தன்னுடைய காதலியை நான் பிரேக் அப் செய்துவிட்டேன். ஏனென்றால், அவளது பெயரின் எழுத்துக்கள் 7 என்ற கணக்கில் இல்லை என்று கூறியிருந்தார்.
தோனியின் ஜெர்ஸி நம்பர் 7 என்பதால், அவர் இவ்வாறு அந்த Chart-ல் எழுதியிருந்தார். இதுதொடர்பான புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்களும், சி.எஸ்.கே ரசிகர்களும், அதனை இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.