மலேசியாவில் ஏ.ஆர்.ரகுமானின் பிரம்மாண்ட MUSIC CONCERT!

வெளிநாடுகளில் பின்பற்றி வந்த MUSIC CONCERT என்ற கலாச்சாரம், தற்போது நமது ஊர்களிலும், தொடர்ச்சியாக பரவி வருகிறது. இந்த கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில், பல்வேறு இசையமைப்பாளர்கள், தாங்கள் இசையமைத்த பாடல்களை, நேரடியாக லைவில் பர்ஃபார்ம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக, ஏ.ஆர்.ரகுமான், தேவா, விஜய் ஆண்டனி ஆகியோர், அதிகப்படியான MUSIC CONCERT-க்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது இன்னொரு MUSIC CONCERT-ல் இசையமைப்பளர் ஏ.ஆர்.ரகுமான் பர்ஃபார்ம் செய்ய உள்ளார். அதாவது, ஏஆர் ரஹ்மான் லைவ் இன் கோலாலம்பூர் 2024 என்ற இசை நிகழ்ச்சி, ஸ்டார் பிளானெட் என்ற பொழுதுபோக்கு நிறுவனத்தின் சார்பில், நடைபெற உள்ளது.

வரும் ஜூலை 27-ஆம் தேதி அன்று, புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு பூங்காவில், இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவு, 8 மே 2024 மதியம் 2:00 மணி தொடங்கி முதல் தொடங்க உள்ளது.

மேலும், இந்த டிக்கெட்டுக்களை, my.bookmyshow.com மற்றும் ticket2U.com.my ஆகிய இரண்டு இணையதளங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இந்த டிக்கெட்டுகளின் விலை, 98 மலேசிய ரிங்கெட்டுகளில் இருந்து தொடங்குகிறது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு, இன்று மலேசியாவில் உள்ள பிரபல 5 நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ஸ்டார் பிளானட்டின் நிர்வாக இயக்குநர் டத்தோ ஆலன் ஃபூ, ஸ்டார் பிளானட்டின் இயக்குநர் டத்தோ ஆர். ராஜேந்திரன், ஏஆர் ரஹ்மானின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான செந்தில் வேலவன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

மேலும் தகவல் மற்றும் டிக்கெட் விவரங்களுக்கு, www.starplanet.com.my ஐப் பார்வையிடவும்.

RELATED ARTICLES

Recent News