தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்!

தமிழகத்தில் அடுத்து 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று முதல் 3 நாள்களுக்கு வடதமிழக உள்மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும். 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அலை அதிகரிக்கக்கூடும். அதன்பிறகு 2 நாள்களில் 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மே 3-ஆம் தேதி வரை வடதமிழக உள்மாவட்டங்களில் சமவெளிப் பகுதிகளில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலை காரணமாக அசௌகரியமான சூழல் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News