அமானுஷ்யமான வீடியோக்களை பார்ப்பதற்கு, இணையத்தில் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த வீடியோக்களை சிலர் தவறாக சித்திரித்தாலும், சில சமயங்களில் அந்த வீடியோக்கள் உண்மையாகவே எடுக்கப்பட்ட வீடியோக்களாக இருந்திருக்கின்றன.
இந்நிலையில், Reddit என்ற சமூக வலைதளப் பக்கத்தில், பயனாளர் ஒருவர், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவி ஒருவர், திடீரென அதீத சத்தத்துடன் கத்த ஆரம்பித்தார்.
பின்னர், அங்கிருந்த மேஜைகளின் மீது ஏற முயற்சித்த அவரை, அங்கிருக்கும் சக மாணவர்களும், ஆசிரியர்களும், அமைதிப்படுத்த முயற்சி செய்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, பல்வேறு தரப்பு கமெண்ட்ஸ்களை பெற்று வருகின்றன.
ஒருசிலர், அந்த பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கும் என்று கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர். ஒருசிலர், அந்த பெண்ணுக்கு மருத்துவ உதவி தேவை என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
வேறுசில நெட்டிசன்கள், வகுப்பறையில் இருந்து வெளியேறுவதற்காக, அந்த பெண் நாடகமாடுகிறார் என்றும் கிண்டலாக கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர். இதற்கிடையே, இந்த வீடியோ, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.