ஆபாசமான முறையில் கொச்சப்படுத்தப்பட்ட தாய் – மகன் உறவு.. இன்ஸ்டாகிராம் மீது பாய்ந்த நடவடிக்கை..

தாய் – மகன் உறவை தவறான முறையில் சித்தரித்ததற்காக, இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளம் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில், போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளின் கீழ், இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, CrPC 91 என்ற சட்டப் பிரிவின் கீழ், அமெரிக்காவில் உள்ள மெட்டாவின் அலுவலகத்திற்கு, நோட்டீஸ்-ம் அனுப்பப்பட்டுள்ளது.

தாய் – மகன் உறவை தவறான முறையில் சித்திரித்த வீடியோக்கள், சமூக வலைதளங்களில் உலாவி வருவதை பார்த்த பிறகே, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் இந்த நடவடிக்ககையை எடுத்துள்ளது.

தற்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ள அத்தகைய வீடியோக்களில், தாயும், மகனும், முத்தம் கொடுத்துக் கொள்வது போன்ற செயல்கள் இடம்பெற்றுள்ளதாம்.

இதுமாதிரியான Content-களை கொண்டுள்ள இன்ஸ்டாகிராம் கணக்கு, மேற்கு வங்க மாநிலத்தின் டக்ஷின் தினாஜ்பூர் மாவட்டத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இந்த ஆண்டு ஜனவரி மாதம், ஆபாசமான Content-களை வெளியிடும் சேனல்களின் பட்டியலுடன் ஆஜராக வேண்டும் என்று, இந்தியாவின் Youtube தலைமை அதிகாரிக்கு, NCPCR உத்தரவிட்டிருந்தது.

இதன்பிறகு, மகாராஷ்டிரா காவல்துறையினர், Youtube India-வின் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், அந்த வீடியோக்களை வெளியிட்ட Youtube சேனல்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News