அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தை சேர்ந்தவர் கிரிஸ்டோபர் கிரிகோர். 31 வயதான இவர், தனது 6 வயது மகன் குண்டாக இருப்பதாக நினைத்து, அவனுக்கு கடினமான உடற்பயிற்சிகள் செய்ய சொல்லி வற்புறுத்தியுள்ளார்.
ட்ரெல் மில்லில் அதிகப்படியான வேகத்தில், அந்த மாணவனை ஓடச் சொல்லி, அவரது தந்தை டார்ச்சர் செய்துள்ளார். ஆனால், வேகமாக ஓட முடியாமல், கீழே விழுந்த அந்த சிறுவனை, அவரது தந்தை, முகத்தில் கொடூரமாக கடித்து வைத்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, சிலவித உடல் உபாதைகளை சந்தித்த அந்த சிறுவன், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டான். அங்கு, சி.டி ஸ்கேன் எடுத்ததில், வலிப்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
அதற்கான சிகிச்சை மேற்கொண்டிருந்தபோது, திடீரென உயிரிழந்துவிட்டான். அவனது இறப்பிற்கு, 12 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரத்திற்குள்ளாக, தந்தை தாக்கப்பட்டதில் ஏற்பட்ட அதிர்ச்சியால், இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து, கைது செய்த கிறிஸ்டோபர் கிரிகோர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதுதொடர்பான வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடந்த நிலையில், தற்போது சிறுவன் கடைசியாக ட்ரெட்மில்லில் ஓடிய வீடியோ, நீதிமன்றத்தில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இதன்மூலம், சிறுவனின் மரணத்திற்கு, கிறிஸ்டோபர் தான் காரணம் என்று உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையை விதித்து உத்தரவிட்டது. இந்த வீடியோ நீதிமன்றத்தில் ஒளிபரப்பானபோது, சிறுவனின் தாய், கண்ணீர்விட்டு, கதறி அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.