கோவிஷீல்டு செலுத்தியவர்களுக்கு அரிதினும் அரிதாக ரத்தம் உறைதல் ஏற்படும் அபாயம் இருப்பதாக லண்டன் நீதிமன்றத்தில், அதன் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஸென்கா ஒப்புக்கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாள்களாக இது குறித்து எக்ஸ் தளத்தில் பலரும் தொடர்ச்சியாக பதிவிட்டுவருகிறார்கள்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கான சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரி கூறுகையில், மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகளை முன்னிட்டே பிரதமர் படம் நீக்கப்பட்டுள்ளது.
ஆனால், கோவிஷீல்டு தடுப்பூசி விவாதத்துக்கு உள்ளான நிலையில் மோடியின் புகைப்படத்தை நீக்கியுள்ளதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.