நடிகர் விஜயின் சினிமா வாழ்க்கையை திருப்பிப் போட்ட திரைப்படம் என்றால், அது கில்லி தான். இந்த படத்திற்கு பிறகு தான், முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக விஜய் மாறினார்.
இவ்வளவு சாதனைகளை படைத்த இப்படம், சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. முதன்முறையாக திரையரங்குகளில் வெளியாகும்போது எத்தகைய வரவேற்பு கிடைத்ததோ, அதே அளவுக்கு தற்போதும் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து தெரியவந்துள்ளது. அதாவது, முதன்முறையாக ரிலீஸ் செய்யும்போது, 40 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்த கில்லி திரைப்படம், ரீ ரிலீஸில் மட்டும், இதுவரை 30 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாம்.
8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த கில்லி திரைப்படம், மொத்தமாக 80 கோடி ரூபாயை ஈட்டி, பட்ஜெட்டை விட, 10 மடங்கு அதிகமாக வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.