திரைப்படங்களில் நடப்பதை காட்டிலும், நிஜ வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள், அதிர்ச்சி அளிக்கும் வகையில், அசாதாரணமாக விஷயமாகவும் அமைந்துவிடுகின்றன. அப்படியான சம்பவம் ஒன்று நடந்து, பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
அதாவது, தாய்லாந்து நாட்டில் உள்ள சுகோதை என்ற பகுதியை சேர்ந்த பெண் பிரபாபோர்ன். அப்பகுதியில் உள்ள ஜனநாயக கட்சியின் உறுப்பினரான இவர், தனது கணவர் “டீ” என்பவருடன் வசித்து வந்தார்.
இந்த தம்பதி, 24 வயதான புத்த மத துறுவி ஒருவரை, தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இந்நிலையில், பிரபாபோர்ன் தனது தத்து மகனுடன் உறவில் இருந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ குறித்து தனது கணவன் கேள்வி எழுப்பியதற்கு, அந்த பெண், “நாங்கள் இரண்டு பேரும், பேசிக் கொண்டு மட்டும் தான் இருந்தோம்.. எங்களுக்குள் வேறு எதுவும் நடக்கவில்லை” என்று கூறினார்.
இதற்கு, “நீங்கள் இரண்டுபேரும் ஒன்றாக இருப்பதை பார்த்தபோது, எனக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது.. நான் ஏமாற்றப்பட்டேன் என்பதை அறிந்து, வருத்தம் அடைந்தேன்” என்று கணவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ வெளியான பிறகு, கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து அந்த பெண் நீக்கப்பட்டுள்ளார்.