அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்து வரும் ஜோ பைடன், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், “இந்தியா, ஜப்பான், சீனா, ரஷ்யாவை சேர்ந்தவர்கள் இனவெறி கொண்டவர்கள்” என்றும், “அதனால் தான் அந்த நாட்டின் பொருளாதாரம் தள்ளாடுகிறது” என்றும் கூறியிருந்தார்.
மேலும், வெளிநாட்டில் இருந்து பிழைப்பதற்கு வருபவர்களை அமெரிக்கா வரவேற்கிறது என்றும் அவர் பேசியிருந்தார்.
இந்நிலையில், ஜோ பைடனின் பேச்சுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர், பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, பிரபல தனியார் செய்தி நிறுவனம் சார்பில், வட்டமேஜை விவாதம் ஒன்று நடத்தப்பட்டது.
இதில் கலந்துக் கொண்ட அவர், ஜோ பைடனின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், இந்தியாவின் பொருளாதாரம் தள்ளாடவில்லை என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியா வெளிப்படையாக இருக்கக் கூடிய சமூகம். அதனால் தான், நாங்கள் CAA என்ற சட்டத்தை வைத்துள்ளோம். இது, பிரச்சனையில் உள்ள மக்களுக்கு, கதவை திறக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும், “இந்தியா வரவேண்டும் என்ற தேவை இருப்பவர்களிடமும், இந்தியா வரவேண்டும் என்று நினைப்பவர்களிடமும், நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.