இந்தியாவில் நாய்க்கடியால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் இந்தியாவில் பல்வேறு வகையான நாய்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
சென்னையில் ராட்வீலர் நாய்கள் கடித்து 5 வயது சிறுமி உயிருக்கு போராடி வரும் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. தடை செய்யப்பட்ட நாய்களை உரிமம் இல்லாமல் அதன் உரிமையாளர் வளர்த்து வந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
23 வகை நாய்கள் வளர்க்கத் தடை
வெளிநாடு பறவைகள், விலங்குகளை இறக்குமதி செய்ய தனியாக அனுமதி பெற வேண்டும். அப்படியிருக்கையில் சமீபத்தில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிக்கை ஒன்றை அனுப்பியது.
அதில் பிட்புல் டெரியர், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டாபோர்ட்ஷையர் டெரியர், பிலா பிரேசிலிரோ, டோகோ அர்ஜென்டினோ, மாஸ்கோ காவலர் நாய், கேன் கோர்சோ , அமெரிக்கன் புல்டாக், போயர்போல் கங்கல், மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய், காகசியன் ஷெப்பர்ட் நாய்,ராட்வீலர் உள்ளிட்ட 23 வகையான வெளிநாட்டு நாய் இனங்களை இறக்குமதி செய்யவும், இனப்பெருக்கம், விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.