விஜயின் மொக்கை படம் ரீ ரிலீஸ்! இது தேவையா கோபி?

ப்ளாக் பஸ்டர் ஹிட்டான கில்லி திரைப்படம், சமீபத்தில் ரீ ரிலீஸ் ஆகியிருந்தது. முதன்முறையாக ரிலீஸ் செய்யப்பட்ட படங்களுக்கு இணையாக, கில்லி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனால், நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இவ்வாறு இருக்க, விஜயின் பிறந்த நாள் அன்று, விஜயின் தோல்வி திரைப்படம் ஒன்று, ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக, தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, பிரபுதேவா இயக்கத்தில், விஜய் நடிப்பில் இரண்டாவது முறையாக உருவான திரைப்படம் வில்லு. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வி அடைந்த இந்த திரைப்படத்தை தான், விஜயின் பிறந்த நாள் அன்று, ரீ ரிலீஸ் செய்ய உள்ளார்களாம்.

கில்லி படத்தின் மூலம் கிடைத்த மாஸை, வில்லு படத்தை வைத்து கெடுத்து விடுவார்கள் என்று, கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News