“கடுமையான நடவடிக்கை எடுக்கணும்” – ராகுல் காந்தி மீது புகார்.. கடிதம் எழுதிய 181 துணை வேந்தர்கள்..!

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளம், கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி அன்று, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் பேசிய ராகுல் காந்தி, “ மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஐ தேர்ந்தெடுப்பது, ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் முடித்து வைத்துவிடும்” என்று கூறினார்.

இதற்கிடையே, “இந்தியாவின் கல்வி அமைப்பில் உள்ள துணை வேந்தர்கள் குறித்து பட்டியல் எடுங்கள். அதில் உள்ள அனைவரும், RSS-ஐ சேர்ந்தவர்கள். அவர்களுக்கு கல்வி பற்றி எதுவுமே தெரியாது” என்று கூறியிருந்தார்.

இவரது இந்த பேச்சு, துணை வேந்தர்கள் மத்தியில், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தற்போது உள்ள மற்றும் முன்பு பணியாற்றிய 181 துணை வேந்தர்கள், AICTE போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளின் தலைவர்கள், Open Letter ஒன்றை எழுதியுள்ளனர்.

அதில், “இது ஒரு அடிப்படை ஆதாரம் அற்ற குற்றச்சாட்டும்” என்றும், “அரசியல் ஆதாயத்திற்காக தான், ராகுல் காந்தி இவ்வாறு கூறியுள்ளார்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ராகுல் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில், டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், எம்.எஸ். பல்கலைக்கழகம் ( பரோடா ), ஹரியானாவின் மத்திய பல்கலைக்கழகம், மகேந்த்திரகர், வடகிழக்கு ஹில் பல்கலைக்கழகம், AICTE தலைவர், UGC-ன் முன்னாள் தலைவர், NCERT-யின் இயக்குநர் உள்ளிட்ட 181 கல்வித்துறை சம்பந்தமானவர்கள், இந்த Open Letter-ல் கையெப்பமிட்டுள்ளனர்.

மேலும், இவ்வாறு கையெப்பமிட்டவர்கள் ஆன்லைன் வாயிலாக, தேர்தல் ஆணையத்திடமும் முறையிட்டுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News