நடிகர் சல்மான் கானின் வீடு, மராட்டிய மாநிலம், மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. இந்த அடிக்குமாடி குடியிருப்பின் வெளிப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் குஜராத் மாநிலம், புஜ் பகுதியில் பதுங்கியிருந்த விக்கி குப்தா, சாகர் பால் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களுக்கு ஆயுதங்களை சப்ளை செய்ததாக சோனு குமார், பிஷ்னோய், அனுஜ் தபன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
போலீசாரின் விசாரணைக் காவலில் இருந்த கைதி அனுஷ் தபன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மும்பை ஐகோர்ட்டில் அனுஷ் தபனின் குடும்பத்தினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 5-வது குற்றவாளியான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ரபீக் சவுத்ரி என்ற நபரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ரபீக் சவுத்ரிக்கு நேரடி தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.