கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் ஹதிப்பாடு பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவருடைய, மகள் சூர்யா சுரேந்திரன் (24). பி.எஸ்சி நர்சிங் படித்து முடித்த சூர்யாவுக்கு, லண்டனில் செவிலியராக வேலை கிடைத்தது.
இதையடுத்து, லண்டன் செல்வதற்காக கடந்த திங்கள்கிழமை கொச்சி சர்வதேச விமான நிலையம் சென்ற போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை ஒரு தனியார் ஆஸ்பத்திரியில சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து விசாரித்த வீட்டு முற்றத்தில் செல்போனில் பேசியபடி நின்றிருந்த நிலையில், செடிகளை பிய்த்து வாயில் வைத்தேன்.. அப்போது தவறுதலாக அரளி செடியின் பூவை வாயில் போட்டு மென்றதாகவும், பின்னர் அதை துப்பிவிட்டேன் . மேலும் விமான நிலையத்துக்கு செல்லும் வழியில் பலமுறை வாந்தி எடுத்தேன் என்று உறவினர்களிடம் அவர் கூறியுள்ளார்..
சூர்யா சுரேந்திரனின் உடல் பாகங்களை ஃபாரன்சிக் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். அந்த சோதனை முடிவுகள் வெளியான பின்னரே செவிலியர் சூர்யாவின் மரணத்துக்கு அரளிப்பூ காரணமா என உறுதியாகத் தெரிவிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.