JP நட்டா மற்றும் அமித் மல்வியாவுக்கு சம்மன் அனுப்பிய காவல்துறை! காரணம் என்ன?

கர்நாடகா பாஜக சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டதற்காக, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் அக்கட்சியின் ஐடி. பிரிவு தலைவர் அமித் மல்வியாவுக்கு, பெங்களூரு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இவ்வழக்கை விசாரிக்கும், விசாரணை அதிகாரிகள் தான், அவர்கள் இரண்டு பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

பெங்களூரு காவல்துறையினர் முன்பு ஆஜராவதற்கு, ஜே.பி.நட்டாவுக்கும், அமித் மல்வியாவுக்கும் ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகா பாஜக, இரண்டு நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.

அந்த வீடியோவில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமய்யா ஆகியோர், எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி பிரிவினர்களை காட்டிலும், முஸ்லீம்களுக்கு அதிக நிதி வழங்கி வருகின்றனர் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வீடியோ வெளியானதையடுத்து, ஜே.பி.நட்டா மற்றும் அமித் மல்வியா மீது FIR பதிவு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News