“இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலில் தலையிடும் அமெரிக்கா” – ரஷ்யா

அமெரிக்காவின் USCIRF என்ற அமைப்பு சமீபத்தில், ஆண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், மத சுதந்திரம் மீறப்படுவது குறித்து, இந்தியா விமர்சிக்கப்பட்டிருந்தது.

மேலும், மதம் தொடர்பான விஷயங்களில் குறிப்பாக அக்கறை கொள்ள வேண்டிய நாடு என அறிவிக்க வேண்டும் என்றும், அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி, பாஜகவின் சில கொள்கைகள் குறித்தும், அந்த அறிக்கையில் விமர்சிக்கப்பட்டிருந்தது.

மேலும், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை சட்டம், இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், மத மாற்ற தடைச் சட்டம் மற்றும் பசுவதை தடுப்பு சட்டம் என்று பல்வேறு சட்டங்கள் இந்தியாவில் அமலாகியிருப்பது குறித்தும், விமர்சிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ள நிலையில், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில், இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலில் தலையிடுவதற்கும், இந்தியாவின் உள்நாட்டு அரசியல் சூழ்நிலையை, சமநிலையற்றதாக மாற்றவும், அமெரிக்கா முயற்சி செய்வதாக கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவின் தேசியவாத மனநிலை மற்றும் வரலாறு குறித்த புரிதல், அமெரிக்காவிடம் குறைவாக உள்ளது என்றும், மதம் தொடர்பான சுதந்திரம் குறித்து ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா முன்வைத்து வருகிறது என்றும், அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இது ஒருதலைபட்சமான அறிக்கை என்றும், USCIRF தனது ஆண்டு அறிக்கையின் மூலம், இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடர்ச்சியாக செய்து வருகிறது என்றும், விமர்சித்தார்.

இதுமட்டுமின்றி, இந்தியாவின் உளவுத்துறை அதிகாரிகள் தான், காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பண்ணுனை கொலை செய்திருப்பார்கள் என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டையும், ரஷ்யா விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக பேசும்போது, “எங்களுக்கு கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில், குர்பத்வந்த் சிங் பண்ணுன் கொலை வழக்கில், இந்தியர்களின் தலையீடு உள்ளது என்பதற்கான, எந்தவொரு ஆதாரத்தையும், அமெரிக்க அரசு இதுவரை வழங்கவில்லை. இந்த விஷயத்தில், ஆதாரம் இல்லாமல், யூகிப்பது ஒத்துக் கொள்ளவே முடியாதது” என்றும், ரஷ்யா கூறியுள்ளது.

RELATED ARTICLES

Recent News