நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து 2-வது அணியாக பஞ்சாப் கிங்ஸ் வெளியேறியது.
நடப்பு ஐபிஎல் தொடரில் 58-வது லீக் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது.
இதில், விராட் கோலி (92), பட்டிடார் (55), கிரின் (46) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வித்வாத் கவேரப்பா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், சாம் கரண் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் களமிறங்குகிறது. 17 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இதில் பஞ்சாப் அணிகாக ரோசோவ் (61), பேர்ஸ்டோவ் (27), ஷஷாங்க் சிங் (37), ரன்கள் எடுத்தனர்.
இதன்மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. மேலும், 8வது தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி தொடரை விட்டு வெளியேறியது. 92 ரன்கள் விளாசிய கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.