டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.
டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது செல்லாது என உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு கடந்த 7ம் தேதி விசாரணைக்கு வந்த போது, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிரான ஆதாரங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. மேலும் ஜூன் 2ஆம் தேதி அவர் சரணடைய வேண்டும் என்ற நிபந்தனையை உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பரப்புரைகளில் மட்டுமே ஈடுபட வேண்டும். இந்த காலகட்டத்தில் முதலமைச்சராக அலுவல் பணிகள் மேற்கொள்ள கூடாது என்ற நிபந்தனையுடனும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.