தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு தற்போது கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிம்பு தக் லைஃப் படத்தில் நடிக்க கூடாது என பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் புகார் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு கொரோனா குமார் திரைப்படத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் போட்டுவிட்டு, நடித்து கொடுக்காமல் ஏமாற்றுவதாக ஐசரி கே. கணேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐசரி கே. கணேஷ் நீதி மன்றத்தை நாடியுள்ளார். அப்போது, இந்த படத்திற்காக சிம்புவிற்கு ரூ. 9.5 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது. இதில் ரூ. 4.5 கோடி அட்வான்ஸ் கொடுக்கப்பட்டதாம். ஆனால், சிம்பு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடிப்பதாகவும் ஐசரி கே. கணேஷ் புகாரில் தெரிவித்துள்ளார்.
எனவே அவர் தற்போது நடிக்கும் தக் லைஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என ஐசரி கே. கணேஷ் புகார் அளித்துள்ளார்.