போதைப் பொருள் கடத்துறீங்களா? ஓய்வு பெற்ற பொறியாளரை நடுங்க வைத்த ஃபோன் கால்.. நடந்தது என்ன?

கர்நாடாக மாநிலம் மங்களூரு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு, செல்போனில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில், தங்களை சர்வதேச குரியர் சர்வீஸ் செய்யும் நிறுவனத்தின் ஊழியர்கள் என்று சிலர் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

மேலும், நீங்கள் அனுப்பியுள்ள குரியர் ஒன்றில், குற்றங்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் போதைப் பொருள் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து பேசிய அவர்கள், சட்டரீதியான பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு, பிணையப் பணம் கொடுக்க வேண்டும் என்றும், விசாரணை நடத்தி முடிந்த பிறகு, மீண்டும் அந்த பணம் உங்களிடமே கொடுப்படும் என்றும் கூறியுள்ளனர்.

மொத்தமாக 1.6 கோடி ரூபாய் பணத்தை, மே 2-ஆம் தேதியில் இருந்து 6 தேதிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக, ஓய்வு பெற்ற பொறியாளர் கொடுத்துள்ளார். ஆனால், கடைசியில் தான் அவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மங்களூரு பகுதியில் உள்ள சைபர், பொருளாதார குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையில், புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், தீவிர விசாரணை நடத்தப்பட்ட வருகிறது.

இந்தியாவில் சைபர் குற்றங்கள்:-

இந்தியாவில் சைபர் பிரிவு குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த குற்றங்களால், கடந்த ஆண்டு, 7 ஆயிரத்து 488 கோடி ரூபாயை, பொதுமக்கள் ஏமாந்திருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சகம், இடைக்கால பட்ஜெட்டின்போது கூறியிருந்தது.

இந்த செயல்களை தடுப்பதற்கு, மத்திய அரசு முயற்சிகளை எடுத்து வந்த போதிலும், எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. இவ்வாறு பணத்தை இழக்கும் மாநிலங்களில், மகாராஷ்டிரா முதலிடத்திலும், அதற்கு அடுத்த இடத்தில் தெலங்கானா மாநிலமும் உள்ளது.

அதற்கு அடுத்தடுத்த இடங்களில், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் குஜராத் உள்ளது. இதற்கிடையே, தேசிய சைபர் க்ரைம் புகார் வலைதளம் ஒன்று, சமீபத்தில் துவக்கப்பட்டிருந்தது.

அனைத்து வகையான சைபர் பிரிவு குற்றங்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக இந்த வலைதளத்தில், குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பான புகார்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News