சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இதுதொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சிஎம்டிஏ (CMDA) அதிகாரியின் புகாரின் பேரில், சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில், சவுக்கு சங்கர் (48) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான குண்டர் தடுப்புக் காவல் அறிக்கை, கோவை சிறையில் உள்ள சவுக்கு சங்கருக்கு இன்று (மே 12) சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப் பிரிவு, சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் மூலம் சார்வு செய்யப்பட்டது.

சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப் பிரிவு, சைபர் கிரைம் பிரிவில் சவுக்கு சங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள மேற்படி வழக்கு உட்பட 7 வழக்குகளில், 3 வழக்குகள் விசாரணையிலும், 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும், மீதமுள்ள 2 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News