நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்து உள்ளார்.
நுரையீரல் தொற்று காரணமாக மே 2 ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இன்று அதிகாலை 1.00 மணியளவில் உடல் நலம் குறைவு ஏற்பட்ட காரணத்தினால் அவர் உயிரிழந்துள்ளார்.
நாகை பாராளுமன்ற தொகுதியில் இருந்து 1989, 1996, 1998 மற்றும் 2019 தேர்தல்களில் செல்வராஜ் வெற்றி பெற்றிருந்தார்.