நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாணவர்களுக்கான சிறப்பு அமர்வு பூந்தமல்லியில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இதில் பங்கேற்றார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சீமான் “உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுவதில் வியப்பேதும் இல்லை. சொல்லப்போனால் இது எதிர்பார்த்த ஒரு முடிவுதான். இன்னும் சொல்ல போனால் அவர் விரைவில் துணை முதல்வராக கூட வாய்ப்பு உள்ளது.” என அவர் கூறினார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என அன்பின் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.எஸ். சிவசங்கர் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.