விலங்குகள் நல பூங்காவில் Zoo Keeper-ஆக பணியாற்றி வருபவர் ஜே பிரேவர். ஊர்வன உயிரிகள் மற்றும் ஆபத்தான விலங்குகளிடம் பயமில்லாமல் பழகும் இவர், அதனை வீடியோவாக எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், பிரேவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், அமைதியான சதுப்பு நிலப் பகுதி முதலில் காட்டப்பட்டது.
திடீரென, அந்த பகுதியில் இருந்த சேற்றில், மறைந்து கிடந்த முதலை, ஜே பிரேவரை தாக்க முயற்சித்தது.
இதயம் துடிப்பதை நிறுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோ, நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. இதுவரை, ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களையும், 4 மில்லியனுக்குமான பார்வைகளையும், இந்த வீடியோ பெற்றுள்ளது.