டீசல் பரோட்டா வீடியோ வைரல்.. விளக்கம் அளித்த உணவகத்தின் உரிமையாளர்..

சண்டிகர் பகுதியில் உள்ள ரோட்டோர தாபாவில், எண்ணெய்க்கு பதில் டீசலை பயன்படுத்தி, டீசல் பரோட்டா என்ற உணவை தயாரிப்பதாக வீடியோ ஒன்று வெளியானது. இதனை, அமன் ப்ரீத் சிங் என்ற ஃபுட் ப்ளாக்கர் தான் வீடியோவாக எடுத்திருந்தார்.

மேலும், தாபாவின் உரிமையாளர் சன்னி சிங் என்பவர் தான், அந்த டீசல் பரோட்டாவை தயாரித்திருந்தார். இது இணையத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இந்த பரோட்டாவை சாப்பிடுவது உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும், சமையல் கூடத்தில் டீசலை பயன்படுத்துவது ஆபத்து என்றும், தங்களது கருத்துக்களை கூறி வந்தனர். மேலும், தாபாவின் உரிமையாளர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலர் கூறியிருந்தனர்.

இந்நிலையில், இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட Food Blogger அமன் ப்ரீத் சிங், தற்போது அதில் இருந்து நீக்கியுள்ளார்.

மேலும், இதுகுறித்து பதிவிட்ட அவர், “மதிப்பிற்குரிய சண்டிகர் அரசு நிர்வாகத்திடமும், சண்டிகர் மக்களிடமும், நான் என்னுடைய மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய சமீபத்திய வீடியோவுக்காக நான் வருத்தம் அடைகிறேன்.

இந்த வீடியோ சிலருக்கு துன்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். நடந்த தவறுக்கு நான் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் இந்த விஷயத்தை புரிந்துக் கொள்வதும், மன்னிப்பதும், எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று” என்று கூறியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து தாபாவின் உரிமையாளர் சன்னி சிங், “டீசல் பரோட்டா என்ற உணவை நாங்கள் சமைப்பதும் கிடையாது, அதனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதும் கிடையாது.

அந்த Blogger அதனை ஒரு Fun-க்காக உருவாக்கியிருந்தார். டீசலில் செய்யப்பட்ட பரோட்டாவை சாப்பிடக் கூடாது என்பது ஒரு பொதுவான அறிவு மற்றும் இது அந்த வகையில் உருவாக்கப்படவும் இல்லை.

அந்த Blogger வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டு, மன்னிப்பும் கேட்டுவிட்டார். நாங்கள் சாப்பிடும் வகையிலான எண்ணெயை மட்டும் தான் பயன்படுத்துகிறோம் மற்றும் சுத்தமான உணவை தான் வழங்குகிறோம்.

இவை அனைத்தையும் சேர்த்து, லாங்கர்-க்கு ( சீக்கியர்களின் முக்கியமான வழிபாட்டு தலங்களில் ஒன்றான குருத்வாரா-வுக்கு வரும் பக்தர்களுக்கு, லாங்கர் என்ற சமையல் அறையில் இருந்து தான் உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இந்த உணவுகள், பக்தர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படுகிறது. ) இங்கிருந்து உணவை சப்ளை செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News