டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு பா.ஜ.க.வினர் போராட்டம்

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யும், டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான சுவாதி மலிவால் நேற்று முன்தினம் முதல்-மந்திரி கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக சுவாதி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு பா.ஜ.க.வினர் இன்று திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News