சென்னையில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட அரசு விரைவுப் பேருந்து இன்று காலை 11 மணியளவில் நெல்லை வண்ணாரப்பேட்டை பணிமனைக்கு வந்தது. பேருந்தை சுத்தம் செய்த போது படுக்கை சீட்டுக்கு அடியில் துப்பாக்கி மற்றும் அரிவாள் ஆகிய பயங்கர ஆயுதங்கள் இருந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அளித்த புகாரின் பேரில், சீட்டுக்கு அடியில் துப்பாக்கி, அரிவாள் வைத்தது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட அரசுப் பேருந்தில் தடய அறிவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்களும் அந்த பேருந்தில் ஆய்வு மேற்கொண்டனர்.